Published : 27 Feb 2023 04:05 AM
Last Updated : 27 Feb 2023 04:05 AM
கோவை: பிஎஸ்ஜிஜி குழுமம் சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் திரைப்பட பின்னணிப் பாடகி ஜொனிதா காந்தியின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தொடக்க விழாவில், பிஎஸ்ஜிஜி இயக்குர் ஜி.சி.சிவராஜ், பிஎஸ்ஜிஜி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.கணேஷ், ஸ்ரீ அக்ரஹார கபே தலைவர் எஸ்.வி.ஆர். ஸ்ரீ வாசன் ஐயர், அருண் ஈவெண்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரம்மாண்ட முறையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
கண்கவர் ஒளி விளக்குகள் பார்வையாளர்களை பரவ சத்துக்குளாக்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்காக பல வித உணவுகளை விற்பனை செய்யும் புட்கோர்ட் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் ஆர்வத்துடன் இசை நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தனர். காவல்துறையினர் மற்றும் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே மேடையில் தோன்றிய திரைப்பட பின்னணிப் பாடகி ஜொனிதா காந்தி ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி அசத்தினார்.
ஒவ்வொரு பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருண் ஈவெண்ட்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT