‘‘தமிழில் நடிக்க விருப்பம்தான். அதேநேரத்தில்...” - நடிகை ஸ்ரேயா 

‘‘தமிழில் நடிக்க விருப்பம்தான். அதேநேரத்தில்...” - நடிகை ஸ்ரேயா 
Updated on
1 min read

தமிழில் நடிக்க விருப்பம்தான் என்றும் அதேநேரத்தில், நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா நடிப்பில் கப்சா திரைப்படம் பான் இந்தியா முறையில் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டி ஒன்றில், “தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தமிழ் சினிமா எனக்கு நிறைய நல்ல படங்களைக் கொடுத்துள்ளது. ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குநர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன்.

திருமணமாகி குழந்தைப் பெற்றது, பிறகு கோவிட் என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மைதான். குறிப்பாக, கோவிட் காலத்தில், மீண்டும் வேலை செய்வோமா என்ற நிலைதான் பலருக்கும் இருந்தது. அதனால், இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன்.

அதேநேரத்தில், நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களை நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும்போது பார்த்து பெருமைப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in