திரைப்படத் துறை வேலைநிறுத்தம் வாபஸ்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

திரைப்படத் துறை வேலைநிறுத்தம் வாபஸ்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்த் திரைப்படத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து மே 30 ம் தேதி முதல் நடத்த திட்டமிட்டிருந்த காலவறையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் வாபஸ் பெற்றுள்ளது.

திருட்டு விசிடி , திரையரங்க கட்டணம், ஜிஎஸ்டி வரி, இணைய தளம் வழியே திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதை தடுப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணவில்லையென் றால் மே 30-ம் தேதி முதல் திரைப் பட படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரத்து செய் யப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஷால் அறி வித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று சென் னையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தின் ஆலோசனைக்கூட்டம் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, விஷால் பேசிய தாவது: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்று ஒரு மாத மாகிவிட்டது. இன்னும் 23 மாதங்கள் இருக்கிறது. நவம்பருக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும்.

என்ன பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங் கள். உங்களுக்கான சரியான தொகை கிடைக்க வேண்டும் என்று தான் உழைத்து வருகிறோம். நம் முடைய படத்தை தவறாக சிலர் உப யோகித்து வருகிறார்கள். தயாரிப் பாளர் பணம் அவர்களுக்கு தான் கிடைக்க வேண்டும். பஞ்சாயத்து என்பதற்கே இங்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை அனைத்து விஷயங்களிலும் கடைபிடிக்கப் படும். இந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். நல்லது மட்டுமே செய்ய காத்திருக் கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in