‘பத்து தல’ புரமோஷன் பாடல் - மகனுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

‘பத்து தல’ புரமோஷன் பாடல் - மகனுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் உட்பட பலர் நடிக்கும் படம், ‘பத்து தல’.

ஒப்பிலி என்.கிருஷ்ணா இயக்கும் இந்தப் படம் கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ என்ற படத்தின் ரீமேக். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இதற்காக புரமோஷன் பாடல் ஒன்று உருவாகிறது. இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானும் அவர் மகன் ஏ.ஆர்.அமீனும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in