Published : 21 Feb 2023 08:51 AM
Last Updated : 21 Feb 2023 08:51 AM
நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்து வரும் படம், 'வீரன்’.
‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். அதிரா ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர், நிச்சயம் ரசிகர்கள் மனதை வெல்லும் என்று தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறையில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT