தனுஷின் ‘வாத்தி’ 3 நாட்களில் ரூ.51 கோடி வசூல்

தனுஷின் ‘வாத்தி’ 3 நாட்களில் ரூ.51 கோடி வசூல்
Updated on
1 min read

சென்னை: நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் மூன்றே நாட்களில் சுமார் 51 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மொத்தமாக ரூ.51 கோடி வரை உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.33 கோடி வரையில் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல். வெளிநாடுகளில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறதாம். அதன் காரணமாக ஒட்டுமொத்தமாக சுமார் 51 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in