புது வீட்டில் குடியேறினார் தனுஷ்

புது வீட்டில் குடியேறினார் தனுஷ்
Updated on
1 min read

தனுஷ் நடித்த ‘வாத்தி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அடுத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னை போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார். இதன் கிரகப்பிரவேசம் சமீபத்தில் நடந்தது. இதில் தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார். இங்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் தனுஷின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் சுப்ரமணியம் சிவா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “தம்பி தனுஷின் புதிய வீடு. கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள்,தெய்வமாக உணரப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in