“பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது” - தமன்னா நெகிழ்ச்சி

“பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது” - தமன்னா நெகிழ்ச்சி
Updated on
1 min read

பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமன்னா கூறுகையில், “பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விசேஷமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரைப் பொறுத்தவரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாஸை சொல்லலாம்.

அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும்” என கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in