மீண்டும் தொடங்கியது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!

'இந்தியன் 2' படப்பிடிப்பு தளம்
'இந்தியன் 2' படப்பிடிப்பு தளம்
Updated on
1 min read

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை லைக்கா தயாரித்து வருகிறது. கடந்த 2017-ல் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து 2019-ல் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. இருந்தபோதும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக பணிகள் தள்ளிப்போனது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க தொடங்கினார் ஷங்கர். பின்னர் 2022 ஆகஸ்ட் வாக்கில் ராம்சரணின் படம் மற்றும் இந்தியன் 2 என இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்குவதாக ஷங்கர் அறிவித்தார். இந்தச் சூழலில் ராம்சரண் படப்பிடிப்பு பணிகள் நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல். அதோடு இன்று முதல் இந்தியன் 2 பணிகள் தொடங்கும் என தகவல் வெளியானது. அதன்படி தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in