நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்த கிளிகள் பறிமுதல்

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்த கிளிகள் பறிமுதல்

Published on

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைந்துள்ளனர்.

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர், பறவைகளையும் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்றும் வெளியானது.

இதையடுத்து அவரது வீட்டுக்கு சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர். வனத்துறை சட்டத்தின்படி பறவைகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனுமதியின்றி வளர்த்ததால் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரோபோ சங்கரிடம் விசாரணை நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in