இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

டி.பி.கஜேந்திரன்
டி.பி.கஜேந்திரன்
Updated on
1 min read

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், "தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இவர் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார். எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

டி.பி.கஜேந்திரன் அவர்கள் திருமலை, சொக்கத்தங்கம், பிதாமகன், பேரழகன் சந்திரமுகி, பம்மல் கே.சம்பந்தம், இவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது.

அவருடைய மறைவு திரைப்படத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் திரைப்பட உலகினருக்கும், ரசிகர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in