

விஜய் சேதுபதி எழுதியுள்ள கதை மற்றும் திரைக்கதையை, பிஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார்.
பன்னீர்செல்வம் இயக்கி வரும் 'கருப்பன்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தான்யா, பாபி சிம்ஹா, கிஷோர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து 'சீதக்காதி', 'அநீதி கதைகள்', '96', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஜுங்கா' உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். இதில் படப்பிடிப்பு இடையே கிடைக்கும் நேரத்தில் ஒரு படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இப்படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்' பட இயக்குநர் பிஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். அதில் விஜய் சேதுபதியே நாயகனாகவும் நடித்து, தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தாண்டு இறுதியில் இதற்கான பணிகளைத் துவக்க திட்டமிட்டுள்ளார்கள்.