மசாலா படங்களுக்கு ‘ட்ரிபியூட்’ - நலன் குமாரசாமி திட்டம்

மசாலா படங்களுக்கு ‘ட்ரிபியூட்’ - நலன் குமாரசாமி திட்டம்
Updated on
1 min read

விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் நலன் குமாரசாமி. இதையடுத்து விஜய் சேதுபதி, மடோனா நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தை இயக்கினார்.

இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. இவர் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படம், நாலு பாட்டு, நாலு பைஃட் என்ற தமிழ் சினிமாவின் பழைய ஃபார்முலாவில் ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகிறது.

மசாலா படங்களுக்கு ‘ட்ரிபியூட்’ செய்யும் விதமாகப் படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேசி வருகின்றனர். வில்லியாக நடிக்கவும் நடிகை ஒருவரிடம் பேசி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in