

மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு வீடு தேடிச் சென்று அளிக்க நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னையில் 'வார்தா' புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், லாரன்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலம், சென்னை முழுக்க மரக்கன்றுகள் அளிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
மக்கள் தங்களுடைய வீடுகள் அல்லது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவை என்றால் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களே வீடு தேடி சென்று மரக்கன்று தருவார்கள் என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 22ம் தேதி முதல் சென்னை முழுவதும் இப்பணிகள் துவங்கும் என்று தான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.