அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல் பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கறிஞர் 

அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல் பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கறிஞர் 
Updated on
1 min read

நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் நடிகர் ரஜினி சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வேறு தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன.

இது பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in