மது, சிகரெட், அசைவம் என இருந்த என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி - நடிகர் ரஜினிகாந்த்

மது, சிகரெட், அசைவம் என இருந்த என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி - நடிகர் ரஜினிகாந்த்
Updated on
1 min read

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் புதிதாக தயாரிக்கவுள்ள 'சாருகேசி' திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். விழாவில் தனது மனைவி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

"எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு திருமணம் நடக்க காரணமானவர் ஒய்.ஜி மகேந்திரன். இதுஒரு குடும்ப விழா என்பதால் இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். எனக்கு 73 வயது ஆகினாலும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனது மனைவிதான். நடத்துனராக இருக்கும்போது கெட்ட சிநேகிதர்கள் சகவாசத்தால் பலதரப்பட்ட கெட்டபழக்கம் வந்தது. நடத்துனராக வேலைபார்த்த போது தினமும் இருவேளை மாமிசம் அதுவும் மட்டன் தான் சாப்பிடுவேன். தினமும் குடிப்பேன், சிகரெட் வேறு கணக்கில்லாமல் எடுத்துக்கொள்வேன்.

நடத்துனராக வேலைபார்த்தபோதே அப்படியென்றால், பணம், புகழ் வரும்போது எப்படி என்று நீங்களே நினைத்து பாருங்கள். காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65. அப்போதெல்லாம் சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும். எப்படி சைவத்தை இவர்கள் சாப்பிடுவார்கள் என்று எண்ணுவேன்.

மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருஷங்கள் எடுத்துக்கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது இல்லை. இதற்கு நிறைய பேரை என்னால் உதாரணம் சொல்ல முடியும். அந்த மாதிரி இருந்த என்னை அன்பால் மாறியவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர் அவர்தான்." இவ்வாறு தனது மனைவி குறித்து ரஜினி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in