தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் - நாளை வெளியாகும் அப்டேட்

தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் - நாளை வெளியாகும் அப்டேட்
Updated on
1 min read

தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் தவிர, அவர் சென்னையின் எஃப்.சி. கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற்பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் திரைத்துறையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க உள்ளார்.


அதன்படி அவர், 'தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in