அறுவைச் சிகிச்சை முடிந்தது - விஜய் ஆண்டனி தகவல்

அறுவைச் சிகிச்சை முடிந்தது - விஜய் ஆண்டனி தகவல்
Updated on
1 min read

நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக லங்காவி தீவில் கடந்த சில நாட்களுக்கு முன், பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. மலேசியாவில் ஆரம்பக்கட்ட சிகிச்சைப் பெற்ற அவர், பின்னர் சென்னை திரும்பினார். தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தன் உடல்நலம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவில், "மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறேன். நான் அறுவைச் சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அக்கறைக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in