காபில் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

காபில் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து
Updated on
1 min read

ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'காபில்' படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சஞ்சய் குப்தா இயக்கத்தில் ரித்திக் ரோஷன், யாமி கெளதம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காபில்'. ராஜேஷ் ரோஷன் பாடல்களுக்கு இசையமைக்க, ராகேஷ் ரோஷன் தயாரித்துள்ளார். ஜனவரி 26ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

ரஜினியின் நெருங்கிய நண்பரான ராகேஷ் ரோஷன், டிசம்பர் 12-ம் தேதி ரஜினிக்கு தொலைபேசியில் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நீண்ட நேரம் நீடித்துள்ளது.

அப்போது, 'காபில்' ட்ரெய்லரைப் பார்த்தேன். ரித்திக் ரோஷன் மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்று ராகேஷ் ரோஷனிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ரஜினி. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 'காபில்' டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in