Published : 23 Jan 2023 11:19 AM
Last Updated : 23 Jan 2023 11:19 AM

‘எனக்கு வந்த தமிழ் வாய்ப்பில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்’ - மஞ்சு வாரியர் தகவல்

நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள மலையாளப் படம், ‘ஆயிஷா’, கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் பேசும்போது கூறியதாவது: ‘அசுரன்’ படத்துக்கு முன்பே தமிழில் எனக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. அப்போது மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். என்னால் தேதி ஒதுக்கிக் கொடுக்க முடியவில்லை.

மேலும் சில பிரச்சனைகள் காரணமாக தமிழில் அப்போது நடிக்க முடியாமல் போனது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’படத்தில் நான் நடிக்க வேண்டியது. இயக்குநர் ராஜீவ் மேனன் முதலில் என்னிடம் கேட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்கவில்லை. அந்த வேடத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நடித்தார். இவ்வாறு மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு நடித்த படம், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இதில் மம்மூட்டி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x