ஆந்திராவில் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடத்த அனாஜ்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு: ஏரியில் ரசாயனம் கலப்பதாக புகார்

ஆந்திராவில் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடத்த அனாஜ்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு: ஏரியில் ரசாயனம் கலப்பதாக புகார்
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ திரைப்பட படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என ஹைதராபாத் அருகே உள்ள கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத் தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப் பில் இந்தப்படம் உருவாகி வரு கிறது. இதில் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின் றனர். இதில் ஒரு கதாபாத்திரத்தில் ரஜினி, மாவட்ட ஆட்சியராக நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது. அங்கு கன்னட ஆதர வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கடந்த 10 நாள் களாக ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அனாஜ்பூரில் வியாழக்கிழமை படப்பிடிப்பு நடந்தபோது அப்பகுதி கிராம மக்கள் திடீரென படப்பிடிப்பை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். படப்பிடிப்பு நடத்துவதால் கிராமத்தில் உள்ள ஏரியில் ரசாயனம் கலப்பதாக தெரிவித்தனர்.

படப்பிடிப்பு நடத்த கிராம பஞ்சாயத்து துறை, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றிருப்பதாக தயாரிப் பாளர்கள் சார்பில் தெரிவித்தனர். ஆனாலும் படப்படிப்பை நடத்த கூடாது என கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்றப்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தில் பிரபல தெலுங்கு திரைப் பட இயக்குநர் (‘நான் ஈ' புகழ்) ராஜமவுலி இயக்கி வரும் பஹுபலி திரைப்பட படப்பிடிப்பையும் பிரச்சினை செய்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பது ஏன்?

அனாஜ்பூர் கிராமத்தில் சாம்பல் வர்ணத்தில் மிகப்பெரிய கோட்டை ‘செட்’ போடப்பட்டுள்ளது. மேலும் 3 யானைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசர் காலத்து கோட்டை, கொத்தளம், படைகள் என படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செட்டுகள் அமைக்க “பிளாஸ்டர் ஆப் பாரிஸ்” , வர்ணம் பூச ரசாயனங்கள் உபயோகிக்கப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ரசாயனங்கள் அருகே உள்ள நீர் நிலையில் கலப்பதால் அதன் நிறம் மாறி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது என ரங்காரெட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in