

ஆட்டோக்களை திரையரங்குகளில் பார்க் செய்ய அனுமதி மறுக்கப்படும் விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கத்தி சண்டை'. டிசம்பர் 23ம் தேதி இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் விஷால். இது தொடர்பாக விஷால் விடுத்துள்ள அறிக்கையில், "தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்கு திரையரங்குகளுக்கு தான் வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நட்டம் ஒன்றும் இல்லை. மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதர்க்கும், அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர்.
ஆகவே இக்கடிதத்தின் வாயிலாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், நமது திரைப்படம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளித்து ஆட்டோ தொழிலாளர் நண்பர்களுக்கு மணமகிழ்ச்சி தரும்படி பணிவன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால்