தமிழ் சினிமா
இரண்டு நாட்களில் ரூ.48.60 கோடி - வசூலில் முன்னேறும் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’
சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் 2 நாட்கள் முடிவில் ரூ.48 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாபி கோலி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ‘வால்டர் வீரய்யா’. ரவிதேஜா, பாபி சிம்ஹா, ஸ்ருதி ஹாசன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், நாசர், கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப்பெற்று வரும் இப்படம் உலக அளவில் முதல் நாள் ரூ.29.6 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளான நேற்று ரூ.19 கோடியை வசூலித்தது. இந்நிலையில் முதல் இரண்டு நாள் வசூலின் அடிப்படையில் “வால்டர் வீரய்யா’ படம் மொத்தம் 48.60 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
