

“அர்ஜுன் தாஸ் ரசிகர்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்று நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது நண்பர் மட்டுமே என்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘ஜகமே தந்திரம்’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி. ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் மூலம் தமிழில் நடிப்பால் கவனம் ஈர்த்தார். ஐஷ்வர்யா லக்ஷ்மி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுடன் இருக்கும்படியான புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் பகிர்ந்திருக்கிறார்.
இதனை அடுத்து, ‘இருவரும் காதலித்து வருகிறார்களா?’ என ரசிகர்கள் கமென்ட்டில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இன்னொரு பக்கம் புதுப்படத்தின் புரோமோஷனுக்காக இப்படி புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்களா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரீயில், “என்னுடைய முந்தையப் பதிவு இந்த அளவிற்கு பெரிதாக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. நானும் அர்ஜூன் தாஸும் சந்திக்க நேர்ந்தது; புகைப்படம் எடுத்து பதிவிட்டேன். இதில் வேறெதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களே ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களுடையவர்” என்று பதிவிட்டுள்ளார்.