

வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் 'காவியத்தலைவன்' படத்தின் இசையினை ஜுலை மாத இறுதியிலும், படத்தினை ஆகஸ்ட் மாத இறுதியிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சித்தார்த், ப்ருத்விராஜ், நாசர், வேதிகா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில், வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் 'காவியத்தலைவன்'. ஒய்.நாட் ஸ்டூடியோஸ் மற்றும் வருண் மணியன் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மொத்த படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்தின் இசை, ட்ரெய்லர் என வேறு எதுவுமே வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது 'காவியத்தலைவன்' இசையினை ஜூலை மாத இறுதியிலும், படத்தினை ஆகஸ்ட் மாத இறுதியிலும் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.