என் பெயரில் பொய் செய்தி: மித்ரன் ஜவஹர் திடீர் பதிவு

என் பெயரில் பொய் செய்தி: மித்ரன் ஜவஹர் திடீர் பதிவு
Updated on
1 min read

‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, தனுஷ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா நடித்து வெற்றி பெற்ற ‘திருச்சிற்றம்பலம்’ உட்பட சில படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இவர் அடுத்தப் படத்துக்கான பணிகளில் இருக்கிறார். அவர் ட்விட்டரில், “திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன்.

வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in