‘எப்புட்றா’ சர்பைரஸ் வசனத்துடன் வெளியான ‘டாடா’ டீசர் எப்படி?

‘எப்புட்றா’ சர்பைரஸ் வசனத்துடன் வெளியான ‘டாடா’ டீசர் எப்படி?
Updated on
1 min read

கவின் நடிக்கும் ‘டாடா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'நட்புனா என்னானு தெரியுமா', 'லிஃப்ட்' படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கவின், அடுத்து நாயகனாக நடிக்கும் படம் 'டாடா'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். பாக்யராஜ், விடிவி கணேஷ், 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு வெளியாகியிருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ''தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

டீசர் எப்படி? - கவின் - அபர்ணா தாஸ் இருவரின் காதல் குறித்தும், தந்தை - மகன் பாசம் குறித்தும் இரண்டு கதைக்களங்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது. டீசரின் பெரும்பகுதி ஐடியில் பணியாற்றும் இருவரின் காதல் குறித்தும், இறுதிப்பகுதி மட்டும் தன் பையனுடன் கவின் விளையாடும் காட்சியுடனும் கட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டீசரின் தொடக்கத்திலிருந்தே பின்னணியில் ஒலிக்கும் ‘எப்புட்றா’ வசனம் பயன்படுத்தியிருக்கும் விதம் சர்ப்ரைஸ் கொடுக்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in