ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் மரணம்: ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல்

ரஜினியுடன் வி.எம்.சுதாகர் | கோப்புப் படம்
ரஜினியுடன் வி.எம்.சுதாகர் | கோப்புப் படம்
Updated on
1 min read

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர். இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது மறைவை, ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் உறுதி செய்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி திரு.சுதாகர் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in