

சூர்யாவின் 42 வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார்.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் இந்தி திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. பென் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் இதைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.