

ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் நடிகர் கிஷோர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘பொன்னியின் செல்வன்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் கிஷோர். இவர் சமூக பிரச்சனைகளுக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருபவர். இவருடைய கணக்கை, ட்விட்டர் நிறுவனம் திடீரென ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.
ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் அவர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கை டேக் செய்து, ‘ஏன் அவர் கணக்கை முடக்கியுள்ளீர்கள்?’ என்று கேட்டு வருகின்றனர்.