கலால்துறை வழக்கு - காயத்ரி படத்துக்கு சிக்கல்

கலால்துறை வழக்கு - காயத்ரி படத்துக்கு சிக்கல்
Updated on
1 min read

பிரியா வாரியர் அறிமுகமான ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய ஒமர் லுலு, அடுத்து இயக்கியுள்ள மலையாளப் படம், ‘நல்ல சமயம்’. இதில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இதன் டிரெய்லரில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவது போல காட்சிகள் இருப்பதாகக் கூறி, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கு எதிராக கோழிக்கோடு நீதிமன்றத்தில் கலால்துறை வழக்குத் தொடர்ந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தை 3-ம் தேதி(நேற்று)யுடன் திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட்டனர். இத்தகவலை ஓமர் லுலு உறுதிப்படுத்தி உள்ளார். “இதைச் சட்டப்படி எதிர்கொள்வேன். நல்ல தீர்ப்பு வந்த பின் மீண்டும் திரையிடுவேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in