இசைக் கருவிகளை உடைப்பதா? - விமான நிறுவனங்கள் மீது பாடகர் பாய்ச்சல்

பென்னி தயாள் | கோப்புப் படம்.
பென்னி தயாள் | கோப்புப் படம்.
Updated on
1 min read

இண்டிகோ,விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இசைக்கருவிகளை எடுத்துச் செல்லும் போது அக்கறையின்றி செயல்படுகின்றன. அதை ஏற்க முடியாது என்று பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார். தமிழில், ‘சிவாஜி’ படத்தில் இடம்பெறும் ‘பல்லேலக்கா’, மைனா’வில் ‘நீயும் நானும்’, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ‘அடியே கொல்லுதே’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

விமான நிறுவனங்கள், இசைக் கருவிகளைக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டுவதாகவும் கடந்த ஒரே வாரத்தில்2 இசைக் கருவிகளை உடைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இண்டிகோ,விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இசைக்கருவிகளை எடுத்துச் செல்லும் போது அக்கறையின்றி செயல்படுகின்றன. அதை ஏற்க முடியாது.

எங்களுக்கு இசைக்கருவிகள் முக்கியமானது; அது தான் எங்களுக்கு உணவளிக்கிறது. தயவு செய்து இசைக் கருவிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அது உடைந்தால் அந்த தவறுக்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in