

டி.ராஜேந்தர் 'வந்தே வந்தே மாதரம், வாழிய நமது பாரதம்' என்ற தலைப்பில் தேசப் பக்தி பாடல் ஒன்றை தமிழ், இந்தியில் உருவாக்கி உள்ளார்.
இதை, தை மாதம் வெளியிட இருக்கிறார். இதுபற்றி டி.ராஜேந்தர் கூறும்போது, “புத்தாண்டு மலர்கின்ற இந்த தருணத்தில் எனது டி ஆர் ரெக்கார்ட்ஸ் என்ற ஆடியோ மற்றும் மியூசிக் வீடியோ மலர இருக்கிறது. முதன்முதலாக பாரத தேசத்திற்காக , 'வந்தே வந்தே மாதரம், வாழிய நமது பாரதம்' என்கிற பாடலை அகில இந்திய கான்செப்டில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கிஉள்ளேன். தை பிறந்ததும் இதை வெளியிட இருக்கின்றேன்" என்று கூறியுள்ளார்.