Last Updated : 21 Dec, 2016 12:53 PM

 

Published : 21 Dec 2016 12:53 PM
Last Updated : 21 Dec 2016 12:53 PM

சி 3 அப்டேட்: ஜனவரி 26-ல் படத்தை வெளியிட திட்டம்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'சி 3' திரைப்படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சி 3'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து, டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், தணிக்கையில் 'யு/ஏ' கிடைத்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இதனால் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு. மறுதணிக்கை பணிகள் தாமதமாகும் என்பதால் டிசம்பர் 23-ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.

'சி 3' பின்வாங்கியதைத் தொடர்ந்து பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது 'சி 3' படத்தை ஜனவரி 26-ம் தேதி வெளியீட்டுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள். பொங்கலுக்கு 'பைரவா' வெளியாவதால், அதிலிருந்து 2 வாரங்கள் கழித்து வெளியிட 'சி 3' படக்குழு முடிவு செய்துள்ளது.

'சி 3' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x