தொடர்ந்த அஜித் கலாய்ப்பு: சாந்தனு காட்டம்

தொடர்ந்த அஜித் கலாய்ப்பு: சாந்தனு காட்டம்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஜித்தின் புகைப்படங்களை வைத்து கிண்டல் செய்யப்பட, அதற்கு சாந்தனு காட்டமாக பதிலளித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்தார் அஜித். அங்கிருந்து சென்னை திரும்பி, மறைந்த தமிழக தலைவர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதன்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்தியவுடன் அஜித் - ஷாலினி தம்பதியினரோடு போலீஸ் அதிகாரிகள் செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை முன்வைத்து பலரும் கிண்டல் செய்த தொடங்கினார்கள்.

தொடர்ச்சியாக கிண்டல் செய்யவே நடிகர் சாந்தனு, "கிண்டலை நிறுத்திக் கொள்ளுங்கள். விமான நிலையத்திலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்துக்கு நேராகச் சென்றார் என்பதை மரியாதையுடன் பாருங்கள்.

அவர் இதயபூர்வமாக நடந்து கொள்பவர் என்பதை இதன்மூலம் காட்டியிருக்கிறார். ரசிகர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புகைப்படம் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். வெளித் தோற்றத்துக்கு சிரிப்பதும், அழுவதும் உள்ளுக்குள்ளும் அப்படியே இருக்கும் என்று அர்த்தமில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சாந்தனு.

சாந்தனுவின் இந்தக் கருத்துகள், தற்போது சமூகவலைத்தளத்தில் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அஞ்சலி செலுத்தியவுடன் புதன் இரவே பல்கேரியாவுக்குத் திரும்பிவிட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in