கமல் மேக்கப்புக்கு 5 மணி நேரம் - ரகுல் ப்ரீத் சிங் தகவல்

கமல் மேக்கப்புக்கு 5 மணி நேரம் - ரகுல் ப்ரீத் சிங் தகவல்
Updated on
1 min read

ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார், கமல்ஹாசன். இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது:

இந்தப் படத்தில் கமல் 90 வயதுடையவராக நடிக்கிறார். அந்தத் தோற்றத்துக்கான மேக்கப் போடுவதற்கு குறைந்தது 5 மணி நேரம் ஆகும். அவர் காலையில் 5 மணிக்கு வந்துவிடுவார். அப்போதுதான் மேக்கப் முடிந்து 10 மணிக்கு படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அந்த ஒப்பனையை அகற்ற 2 மணி நேரமாகும்.

அவர் 60 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அவரை போல வேறு யாருக்கும் சினிமா பற்றி அதிகம் தெரியாது. இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in