

‘வாரிசு’ படத்தை முடித்துள்ள விஜய் அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை விஷால் மறுத்துள்ளார்.
இதுபற்றி விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “விஜய் 67 படத்திற்காக என்னிடம் லோகேஷ் பேசியது உண்மைதான். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் எனக்கு இருப்பதால் அதில்நடிக்க முடியவில்லை. அதேநேரத்தில் விஜய் படத்தைஇயக்கி அதில் வில்லனாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அந்தப் படம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.