சமந்தா போல் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பியா

சமந்தா போல் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட பியா
Updated on
1 min read

நடிகை சமந்தா போல நடிகை பியாவும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘பொய் சொல்லப் போறோம்’, ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’ உட்பட சில படங்களில் நடித்தவர், பியா. இவர், சமந்தாவைப் போல தானும் 'மையோசைடிஸ்’ என்கிற ‘தசை அழற்சி’ நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2016ம் ஆண்டு, ஒரு நாள், காலில் வீக்கத்தை கவனித்தேன். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

மறுநாள் மற்றொரு காலும் வீங்கி இருந்தது. தசை வலியும் அதிகமாக இருந்தது. வலி இல்லாமல் உட்காரவோ, நிற்கவோ முடியவில்லை. பிறகு மருத்துவரிடம் பரிசோதனை செய்தேன். ‘தசை அழற்சி’ நோய் இருப்பது தெரியவந்தது. பயந்தேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை சென்று சிகிச்சைப் பெற்றேன்.

அந்த நாட்கள் பயங்கரமானவை. அதை மருந்துகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதை அந்த நாட்கள் எனக்கு உணர்த்தின. சமந்தாவின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் விரைவில் குண
மடைவார். அவருக்காக பிரார்த்தனை செய்துவருகிறேன். இவ்வாறு பியா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in