விஜய் 67 பட பூஜை - சென்னையில் நடந்தது

விஜய் 67 பட பூஜை - சென்னையில் நடந்தது
Updated on
1 min read

நடிகர் விஜய், வம்சி பைடிபள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தை முடித்துவிட்டார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், விஜய். லலித்குமார் தயாரிக்கிறார். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. விஜய் 67 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப்படத்தின் பூஜை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. இந்தப் படத்தின், அறிவிப்பு டீசருக்கான படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் 4 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடைப்பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in