

மீண்டும் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கதாநாயகன்'. விஷ்ணு விஷால் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் முருகானந்தம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷ்ணு விஷால். ஈஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தின் நாயகியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு தேதிகள் உள்ளிட்டவை முடிவானவுடன், ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
தற்போது 'முண்டாசுப்பட்டி' ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.