அரசியல் வசனங்கள்... 3 இயக்குநர்கள்... - சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’ டீசர் எப்படி?

அரசியல் வசனங்கள்... 3 இயக்குநர்கள்... - சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’ டீசர் எப்படி?

Published on

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்து இயக்கும் படம் ‘ரத்தம்’. விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - தனது படங்களில் வித்தியாசத்தை விரும்பும் சி.எஸ்.அமுதன் டீசரையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குநர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரின் பிண்ணனி குரலில் ஒலிக்க ட்ரெய்லர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண வாழ்க்கையை வாழும் ஒருவர் எப்படி வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்பதை திரை ஆக்கம் செய்திருப்பதற்கான கூறுகள் ட்ரெய்லரின் தெரிகின்றன.

‘யார் யாருக்கு அமைதியான வாழ்க்க தரணும்ங்குற அதிகாரம் நம்ம கிட்ட இல்ல’, ‘இங்கே சாதாரண வாழ்க்கையக்கூட போராடி தான் வாங்க வேண்டும்’ என அரசியல் வசனங்கள் அழுத்தம் சேர்க்கின்றன. போராட்டத்திற்கான முக்கியத்துவத்தையும் டீசர் பேசுகிறது. இறுதியில் சிஎஸ் அமுதன் குரலில் ட்ரெய்லர் முடிவடைகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் அதிகரித்துள்ளது. டீசர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in