

இயக்குநர் மோகன்.ஜி-யின் ‘பகாசூரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. பாலியல் தொழிலாளியாகும் கல்லூரி மாணவிகள் குறித்தும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்தும் பேசும் வகையில் ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் செல்வராகவன் - நட்டி நட்ராஜ் இருவரின் நடிப்பும் கவனம் பெறுகிறது.
‘‘வாழ்க்கையில் எது நடந்தாலும் எதிர்த்து போராட வேண்டுமே தவிர இப்படியெல்லாம் இறங்கிவிடக்கூடாது ஒழுக்கத்தை விட்டோம் எல்லாம் நாசமாக போய்விடும்” என வசனமும் படத்தின் தன்மையை உணர்த்துகிறது. கல்லூரிகள் மற்றும் ஆன்லைன் ஆப்களின் வழியே நடக்கும் பாலியல் தொழில் குறித்த பிரச்சினை இம்முறை கையிலெடுத்திருக்கிறார் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மோகன்.ஜி. ட்ரெய்லர் வீடியோ: