Published : 05 Dec 2022 01:04 PM
Last Updated : 05 Dec 2022 01:04 PM

விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிவின் பாலி, விஷால் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x