

நடிகர் விஜய், ‘வாரிசு’ படத்தை முடித்துவிட்டார். வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகி. பொங்கலுக்கு படம் வெளியாகிறது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நவரச நாயகன் கார்த்திக்கிடமும் வில்லனாக நடிக்க கேட்டதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.