Published : 02 Dec 2022 06:18 PM
Last Updated : 02 Dec 2022 06:18 PM

டிச.5-ல் லோகேஷ் கனகராஜ் - விஜய் இணையும் படத்தின் பூஜை?

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர் விஜய் இணையும் புதிய படத்தின் பணிகள் டிசம்பர் 5-ம் தேதி பூஜையுடன் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிவின் பாலி, விஷால் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் வரும் டிசம்பர் 5-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷனல் வீடியோ ஒன்றை எடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நடிகர் விஜய் திரைத்துக்குள் நுழைந்து டிசம்பர் 4-ம் தேதி 30 ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x