கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக்

கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக்
Updated on
1 min read

நடிகர் சசிகுமார் அடுத்தாக நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

ஹேம்நாத் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘காரி’. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவான இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் இரா.சரவணனனுடன் நடிகர் சசிகுமார் கைகோத்திருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘கத்துக்குட்டி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இரா.சரவணன். தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘உடன் பிறப்பே’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படங்களையடுத்து இரா.சரவணன் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு ‘நந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் பார்வையை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in