3 காலகட்டங்களில் நடக்கும் ‘பாம்பாட்டம்’

மல்லிகா ஷெராவத் | கோப்புப் படம்
மல்லிகா ஷெராவத் | கோப்புப் படம்
Updated on
1 min read

மல்லிகா ஷெராவத் நடித்துள்ள படம், ‘பாம்பாட்டம்’. ஜீவன் 2 வேடங்களில் நடித்துள்ளார். ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய்ப்ரியா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது.

படத்தை இயக்கியுள்ள வி.சி.வடிவுடையான் கூறும்போது, “ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் இந்தப் படத்தின் கதை. கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது.

மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்துப் படமாக்கினோம். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். டிசம்பர் இறுதியில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in