மதுரையில் 'பட்டிக்காடா-பட்டணமா' பொன்விழா ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி: உற்சாகமடைந்த சிவாஜி ரசிகர்கள்

படம் திரையிடப்பட்ட காட்சி
படம் திரையிடப்பட்ட காட்சி
Updated on
1 min read

நடிகர் சிவாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடித்த ‘பட்டிக்காடா பட்டணமா’ பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற சிவாஜி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

கடந்த 1972ல் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘பட்டிக்காடா பட்டணமா’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மனோரமா, உள்ளிட்ட பலரும் நடித்தனர். மதுரை சோழ வந்தானில் படமாக்கப்பட்ட இப்படத்தின் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அந்த படம் வெளியீட்டு விழா, பொன்விழா நிகழ்ச்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.

நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான சிவாஜியின் ரசிகர்களும் விழாவில் பங்கேற்றனர். படம் தொடங்குவதற்கு முன்பாக பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க நடனமாடி ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். புதிய திரைப்படத்திற்கு வருவது போன்று, இத்திரைப்படத்தை காண சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். முதியவர், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்தது. சிலர் டிக்கெட் கிடைக்காமலும் திரும்பினர்.

கிராம வாழ்க்கைக்கும், நகர வாழ்க்கை இடையேயான வாழ்வியலை தத்ரூபமாக பேசும் இப்படத்தை ரசிகர்கள் கண்டு களித்தனர். உற்சாக மிகுதியால் பாடல்களுக்கு நடனமாடிய காட்சிகளும் அரங்கேறின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in