Published : 28 Nov 2022 08:20 AM
Last Updated : 28 Nov 2022 08:20 AM
எம்.ஜி.ஆர், லதா நடித்து 1974ம் ஆண்டு வெளியானபடம், ‘சிரித்து வாழ வேண்டும்’. ‘ஜஞ்சீர்’ என்ற இந்திப்படத்தின் ரீமேக் இது. இந்தப்படம் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியாக இருக்கிறது. இதன் புதிய டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்நடந்தது. சைதை துரைசாமி,சரத்குமார், நடிகை லதா,ஆனந்தா எல் சுரேஷ், சித்ராலட்சுமணன், பிரமிட் நடராஜன்,சொக்கலிங்கம், மயில்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நடிகை லதா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம்பெறும் ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ பாடல், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காகத்தான் பதிவு செய்யப்பட்டது. அதில் நடித்த நான், மஞ்சுளா, சந்திரகலா எல்லோரும் ‘இந்தப்பாட்டு யாருக்கு வரும்?’ என்று கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், அதில் இடம்பெறாமல், ‘சிரித்துவாழ வேண்டும்’ மூலமாக எனக்கே அந்தப் பாடல் வந்துவிட்டது. எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை யாருமே இல்லை” என்றார்.
பிரமிட் நடராஜன் பேசும்போது, இந்தப் படத்தை வித்வான் லட்சுமணன், ‘விகடன்’ மணியன் தயாரித்தனர். எஸ்.எஸ்.வாசன் மகன் பாலன்இயக்குநர். நாளை மறுநாள்படப்பிடிப்பு.அதற்குமுன்எதேச்சையாக எம்.ஜி.ஆர்.கேட்டார், ‘ஜஞ்சீர்’ ரீமேக் உரிமையைவாங்கி விட்டீர்களா?’ என்று.பிறகுதான் இல்லை என்றுதெரிந்தது. உடனடியாக ராமமூர்த்தி என்பவரை மும்பைக்குஅனுப்பி, எழுத்தாளர்கள் சலீம்- ஜாவீத்திடம் இரவோடு இரவாக உரிமையை எழுதி வாங்கிவிட்டு வந்து படப் பிடிப்பைத்தொடங்கினார்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்துவார் என்பதற்காக இதைச் சொல்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT