

ப்ரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்துக்கு '96' என பெயரிட்டு இருக்கிறார்கள்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம் குமார் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அப்படச் சமயத்தில் விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட நட்பால், கதை பிடித்துவிட நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி - த்ரிஷா முதல் முறையாக இணையும் படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
தற்போது தொழில்நுட்ப குழுவினரை இறுதி செய்வதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 'விக்ரம் வேதா', 'தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம்', 'பன்னீர்செல்வம் இயக்கும் படம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ப்ரேம்குமார் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி.